பசுவேஸ்வரர் கோவிலில் இன்று குண்டம்
ADDED :3660 days ago
அந்தியூர்: அந்தியூரை அடுத்துள்ள பர்கூர் ஊசிமலை அருகே, அடர்ந்த வனப்பகுதியில் போதமலை பசுவேஸ்வரர் கோவில் உள்ளது. கோவிலில் குண்டம் திருவிழா இன்று நடக்கிறது. பர்கூர் மலையில் உள்ள, 35க்கும் மேற்பட்ட கிராம மக்கள், நேற்று மாலை முதலே கோவிலுக்கு வரத் துவங்கியுள்ளனர். இன்று இரவு குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கோவிலுக்கு வருவர். பர்கூர் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர்.