எத்தையம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா
ADDED :3614 days ago
கோத்தகிரி: கோத்தகிரி ஒன்னதலை எத்தையம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. புதுப்பிக்கப்பட்ட கோவிலில், நேற்று காலை, 7:00 மணிமுதல், 8:00 மணிவரை கலசபூஜை நடந்தது. தொடர்ந்து, விநாயகர், எத்தையம்மனுக்கு கண் திறந்து, கும்பாபிஷேகம் நடந்தது. பஜனையுடன், அம்மன் அருள்வாக்கு இடம் பெற்றது. காலை, 10:30 மணிக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஊர் தலைவர் பெள்ளாகவுடர் முன்னிலையில், பூசாரிகள் சிவன், கோபால் மற்றும் போஜன் உள்ளிட்டோர், கும்பாபிஷேகத்தை நடத்தினர். ஒன்னதலை சுற்றுவட்டார கிராம மக்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அடுத்த மாதம் இறுதியில் நடைபெறும் முக்கிய திருவிழாக்காக, வரும், 21ம் தேதி, எத்தையம்மனுக்கு உரித்தான சக்கலாத்தி என்னும் திருவிழா முதல், அடுத்த மாதம் இறுதியில் நடைபெறும் முக்கிய திருவிழா வரை, செங்கோல் பக்தர்கள் விரதம் மேற்கொள்கின்றனர்.