உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வன்னீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் தீவிரம்!

வன்னீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் தீவிரம்!

விழுப்புரம்: அருகாவூரில் அமைந்துள்ள வன்னீஸ்வரர் கோவிலில், கும்பாபிஷேகத்தை யொட்டி திருப்பணிகள் துவங்கியுள்ளது. செஞ்சி அடுத்த அருகாவூர் கிராமத்தில் பல ஆண்டுகள் பழமைவாய்ந்த வன்னீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. கடந்த 7ம் நுõற்றாண்டு சோழ மன்னர்களால் வடிவமைக்கபட்டுள்ள, இந்த கோவில் தற்போது முற்றிலும் சேதமடைந்துள்ளது. இந்த கோவிலை புனரமைத்து, அப்பகுதி மக்கள் மூலம் விரைவில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த பணிக்கு பொருளுதவி கொடுப்பவர்களுக்காக, வங்கியில் கூட்டு சேமிப்பு கணக்கு துவங்கப்பட்டுள்ளது. திருப்பணிக்கு 10 ஆயிரம் ரூபாய் மற்றும் அதற்கு மேல் நிதியுதவி அளிப்போரின் பெயர்கள் கோவில் கல்வெட்டில் பதிவு செய்யப்படுகிறது. கோவிலுக்கு நிதியுதவி அளிக்க விரும்புவோர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, செஞ்சி, கணக்கு எண் : 273601000004909, என்ற பெயருக்கு, காசோலை அல்லது டிடி மூலம் எடுத்து அனுப்பலாம் என கோவில் அறக்கட்டளை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !