உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவி. ஆண்டாள் கோபுரத்தில் தங்கதகடு

ஸ்ரீவி. ஆண்டாள் கோபுரத்தில் தங்கதகடு

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் திருப்பாவை விமானகோபுரத்தில் தங்கதகடுகள் பதிக்கும் பணி நாளை துவங்குகிறது.இக்கோயில் திருப்பாவை விமானகோபுரத்தை தங்ககோபுரமாக மாற்ற ராம்கோ சேர்மன் ராமசுப்பிரமணியராஜா தலைமையிலான நாச்சியார் சாரிட்டிபிள் டிரஸ்ட் மூலம் பக்தர்களிடமிருந்து 76 கிலோ தங்கம் நன்கொடையாக பெறப்பட்டு, கோபுரத்திற்கு தங்கதகடுகள் தயாரிக்கும் பணி நடந்தது. தற்போது பணிகள் முடிந்து தகடுகள் பதிக்கும் பணி நாளை காலை 9.30 மணிக்கு துவங்குகிறது. ஏற்பாடுகளை கோயில் தக்கார் ரவிச்சந்திரன், செயல்அலுவலர் ராமராஜா தலைமையில் கோயில் அலுவலர்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !