உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி கார்த்திகை தீப விழா நவ.19ல் துவக்கம்

பழநி கார்த்திகை தீப விழா நவ.19ல் துவக்கம்

பழநி: பழநி மலைக்கோயில் கார்த்திகை தீப விழா நாளை மறுநாள் (நவ., 19) துவங்குகிறது. பழநி மலைக்கோயிலில் கந்தசஷ்டி விழா நாளை திருக்கல்யாணத்துடன் முடிகிறது. மறுநாள் (நவ.,19) கார்த்திகை தீப விழா துவங்குகிறது. அன்று மலைக்கோயிலில் மாலை 5.30 மணிக்குமேல் சாயரட்சை பூஜை நடக்கும்.தொடர்ந்து மூலவர் ஞானதண்டாயுத சுவாமி, சின்னக்குமார சுவாமி, சண்முகர், வள்ளி, தெய்வானை, துவார பாலகர்கள், விநாயகர், மயிலுக்கு காப்புக்கட்டப்படும்.விழா நாட்களில் உட்பிரகாரத்தில் யாகசாலை பூஜை, சண்முகார்ச்சனை, மகா தீபாராதனை நடக்கிறது. சின்னக்குமார சுவாமி தங்கசப்பரத்தில் திருவுலா வருவார்.தங்கரதம் நிறுத்தம்நவ.,25ல் பவுர்ணமி திருக்கார்த்திகையை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு மலைக்கோயில் நடை திறக்கப்படும். பிற்பகல் 2 மணிக்கு மேல் சண்முகார்ச்சனை, மகாதீபாராதனை நடக்கும். சாயரட்சை பூஜை மாலை 4 மணிக்கு நடத்தப்பட்டு, சின்னக்குமாரசுவாமி தங்கமயில் வாகனத்தில் தரிசனம் தருவார். மலைக்கோயில் நான்கு பக்கத்திலும் தீபங்கள் ஒளிர, மாலை 6 மணிக்குமேல் திருக்கார்த்திகை தீபம், சொக்கப்பனை ஏற்றப்படும். இதனால் அன்று தங்கரத புறப்பாடு நிறுத்தப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !