சபரிமலையில் சேவை செய்ய மாணவர்களுக்கு அழைப்பு
ஈரோடு: அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் தொண்டர் படை சார்பில், சபரிமலையில் சேவை செய்ய பக்தர்கள், கல்லூரி மாணவர்கள் விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.
சபரிமலை மண்டல பூஜை, மகரவிளக்கு சீசனையொட்டி, நாடு முழுவதிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசித்து வருகின்றனர். சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு சேவை செய்வதற்காக, அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் மூலமாக கல்லூரி, என்.சி.சி., என்.எஸ்.எஸ்., மாணவர்கள், இளைஞர்கள், தேர்வு செய்து சேவை முகாம்களுக்கு அனுப்பப்படுகின்றனர். இந்த ஆண்டு மண்டல பூஜை, மகரவிளக்கையொட்டி சபரிமலையில் சேவை செய்ய விருப்பமுள்ளவர்கள், ஈரோடு மாவட்டத்தில் தேர்வு செய்யப்படவுள்ளனர். நவ., 25, டிச., 6, 16, 28, தேதிகள் மற்றும் ஜன., 8, ஆகிய ஐந்து பேட்சுகளாக சபரிமலைக்குச் சென்று அங்குள்ள முகாம்களில், 12 நாட்கள் தங்கியிருந்து, பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பல்வேறு சேவைகளை செய்யலாம். 12 நாட்கள் முழுமையாக தங்கியிருந்து சேவை செய்பவர்களுக்கு உணவு, தங்குமிடம், ஒரு வழி பஸ் கட்டணம், சான்றிதழ் வழங்கப்படும். சேவை செய்ய விருப்பமுள்ளவர்கள் கல்லூரி மாணவர்களாக இருப்பின், 4 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, கல்லூரி மூலமாகவும், பக்தர்களாக இருந்தால், 5 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, மற்றும் முகவரி சான்றுடன், ஈரோடு மாவட்ட அகில பாரத ஐயப்பா சேவா சங்கத்தை, 8973405331, 9442739596, 9443498022 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.