திரும்பிய பிறகும் தொடரும் விரதம்!
ADDED :4010 days ago
சபரிமலை ஐயப்பன் கோவில் செல்லும் பக்தர்கள் கார்த்திகை முதல் தேதியே மாலை அணிந்து, அன்று முதல் 41 நாட்கள் விரதம் இருக்க வேண்டும். இடையில் கோவிலுக்குப் போய் வந்த பிறகு, மாலையைக் கழற்றி விட்டாலும் கூட மகரவிளக்கு வரை விரதத்தை தொடர வேண்டும். இந்த 60 நாட்களும் பிரம்மச்சரிய விரதம் பூண்டு, உணவைக் குறைத்து, ஐயப்பன் புகழ்பாடி விரதம் இருக்க வேண்டும். இதன்மூலம் ஐயப்பனின் அருளை முழுமையாகப் பெறலாம்.