ராஜசோளீஸ்வரர் கோவிலில் கந்தசஷ்டி தேர் திருவிழா!
ADDED :3617 days ago
காரைக்கால்: திருமலைராயன்பட்டிணம் ராஜசோளீஸ்வரர் கோவிலில் கந்தசஷ்டி விழாயோட்டி தேர் திருவிழா நடந்தது. காரைக்கால் திருமலைராய ன்பட்டினத்தில் உள்ள அபிராமி அம்பாள் சமேத ராஜசோளீஸ்வரர் கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த 2ம் தேதி பந்தகால் முகூர்த்ததுடன் துவங்கி யது.அன்று மாலை விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, புற்று மண் எடுத்தல் நடந்தது. ரக்ஷாபந்தனம், யாகசாலை பூஜை முடிந்து மாலை சூரிய பிறை, சந்திர பிறையில்,யானை வாகனம்,சிம்ம வாகனம்,இடும்ப வாகனத்தில் சாமி வீதி உலா மற்றும் வெண்னைத்தாழி நிகழ்ச்சி நடந்தது.நேற்று தேர் தி ருவிழா மற்றும் அபிராமி அம்மனிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சியும், மாலை சூரசம்கார,இரவு முருகப்பெருமான் ஆட்டுகிடா வாகனத்தில் சூரபத்மனை சம்ஹாரம் செய்யும் நிகழ்வும் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகின்றனர்.