உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / "கார்த்திகை முதல் நாள் பழநியில் மாலை அணிந்த ஐயப்ப பக்தர்கள்

"கார்த்திகை முதல் நாள் பழநியில் மாலை அணிந்த ஐயப்ப பக்தர்கள்

பழநி: கார்த்திகை மாதப் பிறப்பை முன்னிட்டு பழநி கோயில்களில் ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு மாலை அணிந்தனர்.கார்த்திகை முதல்நாளை முன்னிட்டு பழநி மலைக்கோயில் ஆனந்தவிநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், யாகபூஜை, வெள்ளிக்கவச அலங்காரத்தில் மகா தீபாராதனை நடந்தது. பாதவிநாயகர்கோயில், திருஆவினன்குடிகோயில், கிரிவீதி ஐயப்பன் கோயில்களில் குருசுவாமி மூலம் பக்தர்கள் அதிகாலையில் மாலையணிந்தனர். ஐயப்பன் கோயில் மண்டல பூஜைக்கு செல்லும் லட்சக்கணக்கான பக்தர்களுக்காக காதி வஸ்திராலயம் மற்றும் ஜவுளி கடைகளிலும், வழக்கமான துணிகளை விட நீலம்,கருப்பு, காவி ஆடைகள், துளசிமணி மாலை, பாசிமணிகள், இருமுடி பைகள் விற்பனைக்கு வந்துள்ளது. வேட்டி,துண்டு, மாலைகளின் விலை, கடந்த ஆண்டை காட்டிலும் விலை அதிகமாகியுள்ளதாக பக்தர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !