தி.மலை தீப விழா: பூத வாகனத்தில் சுவாமி வீதி உலா!
ADDED :3773 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப விழாவில், மூன்றாம் நாளில் காலை உற்சவத்தில் பூத வாகனத்தில் உண்ணாமுலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
சிம்ம வாகனத்தில் விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தõர். கோவிலில் காலை 1008 சங்காபிஷோகம் மற்றும் சிறப்பு யாகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். கார்த்திகை தீப விழாவில் முன்னிட்டு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டு உள்ள சிறப்பு மருத்துவ முகாமில் தினமும் பக்தர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்படுகிறது.