கைலாசநாதர் கோவிலில் வேலுக்கு அபிஷேகம்!
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு காமாட்சி அம்மன் சமேத கைலாசநாதர் கோவிலில் சூரசம்ஹார திருவிழா நடந்தது. விழாவையொட்டி, கடந்த 12ம் தேதி கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து 15ம் தேதி இரவு 7:00 மணிக்கு சிவபெருமானிடம் சூரபதுமன் வரம் பெறுதல் மற்றும் தாருகாசூரன் வதம் செய்தல் நடந்தது. 16ம் தேதி இரவு 8:00 மணிக்கு முருகர் காமாட்சி அம்மனிடம் சக்திவேல் வாங்குதலும், சிங்கமுக சூரனை வதம் செய்தலும் நடந்தது. அதனையடுத்து 17ம் தேதி காலை 7:00 மணிக்கு கந்தசஷ்டியை முன்னிட்டு சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. காலை 9:00 மணிக்கு வீரபாகு தேவர்கள் ஊரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர். மாலை 5:00 மணிக்கு தேவர்கள் கம்பம் ஏறுதலும் அதனைத் தொடர்ந்து சூரபத்மனை வதம் செய்தலும் நடந்தது. இரவு 7:00 மணிக்கு சக்தி வேலுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. நேற்று 18ம் தேதி திருக்கல்யாணம் நடந்தது. ஏற்பாடுகளை நிர்வாக அறங்காவலர் சுவாமிநாதன் தலைமையில் விழாக் குழவினர் செய்திருந்தனர்.