உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தி.மலை தீப திருவிழாவில் 1,008 சங்காபிஷேகம்!

தி.மலை தீப திருவிழாவில் 1,008 சங்காபிஷேகம்!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அண்ணா மலையார் கோவிலில், கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு, 1,008 சங்காபி?ஷகம் நேற்று நடந்தது. அதை தொடர்ந்து, விழாவை சிறப்பாக நடத்த, பாரம்பரிய காணிக்கை வெள்ளி உண்டியல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவிலில், கார்த்திகை தீப திருவிழாவை சிறப்பாக நடத்த, வெள்ளி உண்டியல் வைத்து, முக்கிய பிரமுகர்களிடம் காணிக்கை வசூல் செய்யப்படுவது வழக்கம். பாரம்பரியம் மாறாமல் இருக்க, காணிக்கை உண்டியல் வைக்கும் நடைமுறை தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகிறது. அதன்படி, வெள்ளி உண்டியல் வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதில், நகரில் உள்ள முக்கிய பிரமுகர்கள் காணிக்கை செலுத்தினர். தொடர்ந்து, சிவாச்சாரியார்கள் சிறப்பு ஹாமம் நடத்தி, வேதமந்திரம் முழங்க, அண்ணாமலையாருக்கு, 1,008, சங்காபிஷேகம் நடந்தது. நேற்று, உலகப்பற்று, பொருட்பற்று, பெண்பற்று ஆகியவற்றை நீக்கி அருள் புரிய வேண்டும் என்ற நோக்கில், மூன்றாம் நாள் திருவிழா கொண்டாடப்பட்டது. விநாயகர் மூஷிக வாகனத்திலும், சந்திரசேகரர் பூத வாகனத்திலும் வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இரவு, 10 மணிக்கு, விநாயகர் மூஷிக வாகனத்திலும், சமேத வள்ளி தெய்வானை சுப்பிரமணியர் மயில் வாகனத்திலும், உண்ணாமுலை சமேத அண்ணாமலையார் சிம்ம வாகனத்திலும், பராசத்தி அம்மன் வெள்ளி அன்ன வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்திலும் வீதி உலா வந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !