விழுப்புரம், கண்டாச்சிபுரத்தில் சூரசம்ஹார நிகழ்ச்சி
ADDED :3726 days ago
கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவிலில் கந்த சஷ்டியையொட்டி கம்பம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது. கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவிலில், கந்த சஷ்டி விழா, கடந்த 11ம் தேதி துவங்கியது. நேற்று முன்தினம் மாலை 6:00 மணியளவில், வீரவாகு தேவர்கள் கம்பம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக வள்ளி,தேவசேனா, ஆறுமுக சுவாமிகளுக்கு சிறப்பு ஆராதனைகள் நடந்தது. இரவு சுவாமிகளின் இந்திர விமான வீதியுலா நடந்தது. தமிழ் வேதவார வழிபாட்டு சபையினர் தேவார, திருவாசக பாடல்களை பாடினர். பின்னர் வாசப்பு நிகழ்ச்சியும், சூரசம்ஹாரம் வதமும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா ரவிச்சந்திரன், சிவாச்சாரியார் பாலகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.