உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கூடலுார் முருகன் திருக்கல்யாண உற்சவம்: பக்தர்கள் பரவசம்

கூடலுார் முருகன் திருக்கல்யாண உற்சவம்: பக்தர்கள் பரவசம்

கூடலுார்: கூடலுார் விநாயகர் கோவிலில் நடந்த, முருகன் திருக்கல்யாண உற்சவத்தில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். கூடலுார் விநாயகர் கோவிலில் கந்த சஷ்டி திருவிழா, கடந்த 12ல் துவங்கியது. 17ம் தேதி காலை, 8:45 மணிக்கு சிறப்பு யாக பூஜைகள், சிறப்பு கலச அபிஷேகம் நடந்தது. மாலையில் சூரசம்ஹாரம் நடந்தது.18ல் திருக்கல்யாண உற்சவ பூஜைகள் துவங்கின. இரவு, 8:00 மணிக்கு, முருகன், -வள்ளி, - தெய்வானை திருக்கல்யாணம் விழா சிறப்பாக நடந்தது. தொடர்ந்து பட்டின பிரவேசம், அலங்கார ஊர்வலம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டி நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !