பொள்ளாச்சி சுப்ரமணியர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
ADDED :3645 days ago
பொள்ளாச்சி : பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், 12ம் தேதி, காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன், சூரசம்ஹார விழா துவங்கியது. 17ல் முருகப்பெருமான் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. நேற்றுமுன்தினம் காலை, 9:00 மணிக்கு, மகா அபிஷேகம், மாலை, 6:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று மாலை, 6:00 மணிக்கு, திருஊஞ்சல் உற்சவ நிகழ்ச்சியும் நடந்தது.