உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பகவதியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா

பகவதியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா

ப.வேலூர்: ப.வேலூர் வட்டம், கபிலர்மலை அருகே, செம்மடைபாளையம் பகவதியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடந்தது. விநாயகர் வழிபாடு, கணபதி ஹோமம், மகாலட்சுமி யாகம், தீபாராதனை நடந்தது. பக்தர்கள் காவிரியாற்றுக்குச் சென்று புனித தீர்த்தக் குடங்களை ஊர்வலமாக எடுத்து வந்தனர். நேற்று அதிகாலை, 4 மணிக்கு விநாயகர் வழிபாடு, கடம் புறப்பாடு நடந்தது. காலை, 7 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. விநாயகர், பொட்டுசாமி உள்ளிட்ட பரிவார மூர்த்திகளின் சன்னதி விமானங்களுக்கு புனிதநீரை சிவாச்சாரியர்கள் ஊற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !