உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா பணி விளக்க கண்காட்சி

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா பணி விளக்க கண்காட்சி

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், கார்த்திகை தீபத்திருவிழா பணி விளக்க கண்காட்சி திறக்கப்பட்டது. திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவிலில் கொண்டாடப்படும் கார்த்திகை தீபத் திருவிழா பல்துறை பணிவிளக்க கண்காட்சியை, நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். கலெக்டர் ஞானசேகரன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் நைனாக்கண்ணு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கத்திரிக்காயால் லிங்கம் உருவம் அமைக்கப்பட்டு, வெண்ணெய் மூலம் மலை உருவம் அமைக்கப்பட்டு, பீட்ரூட், கேரட், முள்ளங்கி, உள்ளிட்ட காய்கறிகளில் மலர் போன்றும், செடி போன்றும் உருவம் அமைக்கப்பட்டடிருந்தது கண்காட்சியில் பார்ப்போரை கவர்ந்தது. மேலும், நவ தானியத்தால் கோவிலின், 9 கோபுரமும் அமைக்கப்பட்டிருந்தது பார்ப்போரை கவர்ந்தது. இதேபோன்று பள்ளி கல்வித்துறை, சமூக நலத்துறை, செய்தி மக்கள் தொடர்பு துறை மூலம் அமைக்கப்பட்ட போட்டோ கண்காட்சியும் சிறப்பாக காணப்பட்டது. பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !