புதுச்சேரி காமாட்சி அம்மன் கோவில் முதல்கால யாக சாலை பூஜை!
ADDED :3658 days ago
புதுச்சேரி: புதுச்சேரி காமாட்சி அம்மன் கோவில் வீதி வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் வரும் 23ம் தேதி நடக்கிறது. இதையொட்டி நேற்று விக்னேஸ்வர பூஜை, தீப லட்சுமி பூஜை, வேதபாரா யணம், முதல்கால பூஜை, பூர்ணாஹூதி நடந்தது. இன்று இரண்டாம் கால யாக பூஜை, ஹோமம், வடுக பூஜை மூன்றாம் காலயாக பூஜை, 22ம் தேதி காலை நான்காம் கால யாக பூஜை, மாலை 6:00 மணிக்கு ஐந்தாம் கால யாக பூஜை, சோமகும்ப பூஜை நடந்தது. 23ம் தேதி காலை ஆறாம் கால யாகபூஜையும், காலை 9:40 மணிக்கு ராஜகோபுரம், விமானம் பரிவார மூர்த்திகள் மகா கும்பாபிேஷகம் நடக்கிறது. 9:50 மணிக்கு வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் மகா கும்பா பிஷேகம், தீபாராதனை நடக்கிறது.