காசி விஸ்வநாதர் கோவிலில் சங்காபிஷேகம்
ADDED :3658 days ago
ப.வேலூர்: ப.வேலூர் அருகே, பாண்டமங்கலம் பழைய காசி விஸ்வநாதர் கோவிலில் கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து நடந்த மண்டல பூஜை நிறைவு நாளை முன்னிட்டு, சங்காபிஷேகம் நடந்தது. பாண்டமங்கலத்தில் பாண்டவர்கள் வழிபட்டதாகக் கூறப்படும் பழைய காசி விஸ்வநாதர் கோவிலில், கும்பாபிஷேகம், கடந்த அக்டோபரில் நடந்தது. இதைத் தொடர்ந்து, தினமும் மண்டல பூஜை நடந்தது. நிறைவு விழா முன்னிட்டு, நேற்று, சங்காபிஷேகம் பூஜை நடந்தது. பின்னர், விசாலாட்சி அம்மன் உடனுறை காசி விஸ்வநாதருக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடந்தது.