உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலையில் சிறுவர்கள் பிரிந்தால் கண்டுபிடிக்க அடையாள அட்டை

சபரிமலையில் சிறுவர்கள் பிரிந்தால் கண்டுபிடிக்க அடையாள அட்டை

சபரிமலை: சபரிமலையில் வரும் பக்தர்களில் சிறுவர்கள் தங்களது குழுவை விட்டு பிரிந்தால் அவர்களை கண்டு பிடிக்க பம்பையில் அடையாள அட்டை வழங்கப்படுகிறது. சபரிமலை வரும் பக்தர் கூட்டத்தில் சிறுவர்கள் தங்களுடன் வந்தவர்களை விட்டு பிரிந்து விடுகின்றனர். 18-ம் படியேற கியூவில் நிற்கும் போதும், 18-ம் படி ஏறும் போதும், இரவில் தங்கும் இடங்களிலும் சிறுவர், சிறுமியர் அவர்களுடன் வந்தவர்களை விட்டு பிரிந்து விடுகின்றனர். இவர்களை காணும் போலீசார் மற்றும் ஐயப்பா சேவா சங்க தொண்டர்கள் சன்னிதானம் விளம்பர நிலையத்தில் ஒப்படைக்கின்றனர். இங்கு ஒலிபெருக்கியில் அறிவிப்பு வெளியிட்டு உரியவர்களுடன் ஒப்படைக்கின்றனர்.எனினும் சில சிறுவர் சிறுமியருக்கு தங்கள் பெற்றோர் விபரங்களை கூட சொல்ல தெரியாத நிலையில் இருப்பவர். எனவே எட்டு வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமியருக்கு பம்பை ஆஞ்சநேயர் ஆடிட்டோரியம் அருகே அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இதில் பெற்றோர் பெயர், முழு முகவரி, இரண்டு டெலிபோன் எண் ஆகியவை இடம் பெற்றிருக்கும். இதன் மூலம் குழந்தைகள், சிறுவர்கள் கூட்டம் பிரிந்தால் அவர்களை சுலபமாக உரியவரிடம் ஒப்படைக்க முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !