மஞ்சூர் ஐயப்பன் கோவிலில் சிறப்பு பூஜை
ADDED :3658 days ago
மஞ்சூர்: மஞ்சூர் அடுத்துள்ள அருள் மலை ஐயப்பன் கோவிலில் நடை திறக்கப்பட்டது. மஞ்சூர், அன்னமலை முருகன் கோவில் அருகே அருள் மலை ஐயப்பன் கோவில் உள்ளது. கார்த்திகை முதல் தேதயில், 6:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. சபரி மலைக்கு செல்லும் பக்தர்கள், ஐயப்பன் கோவில் வளாகத்தில், மாலை அணிந்து விரதத்தை துவக்கினர். அதேபோல், மஞ்சூர் தர்ம தாஸ்தா ஐயப்பன் கோவிலில் நடை திறக்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.