சேங்கல் மலை வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு அபிசேகம்
ADDED :3722 days ago
கரூர்: கரூர் அருகே, சேங்கல்மலை வரதராஜ பெருமாள் கோவிலில், ஸ்ரீஸ்வர்ண ஹர்ஹபைரவருக்கு அஷ்டமி தேய்பிறை முன்னிட்டு, நேற்று முன்தினம் சிறப்பு அபிசேகம், பூஜை நடந்தது. கரூர் அடுத்த, புன்செய்தோட்டக்குறிச்சி கிராமத்தில் உள்ள சேங்கல்மலையில் வரதராஜபெருமாள் கோவில் உள்ளது. சனிக்கிழமை தோறும் பக்தர்கள் இக்கோவிலுக்கு அதிகளவில் வருவர். நேற்று முன்தினம் அஷ்டமி தேய்பிறை என்பதால், பெருமாளுக்கு பால், தயிர், திருநீர், இளநீர், மஞ்சள், சந்தனம் மற்றும் பல்வேறு திரவியப் பொடிகள் கொண்டு சிறப்பு அபிசேகம் நடந்தது. இரவு, 8 மணியளவில் பெருமாளுக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. அதன் பின் அன்னதானம் வழங்கப்பட்டது.