குமரகுரு சுப்பிரமணியஸ்வாமி கோவிலில் 63 நாயன்மார்களுக்கு சிறப்பு அபிேஷகம்
சேலம் : சேலம் அம்மாபேட்டை, செங்குந்தர் குமரகுரு சுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில், பன்னிரு திருமுறை மன்றத்தின், இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, 63 நாயன்மார்களுக்கு சிறப்பு அபிேஷகம் செய்யப்பட்டது.காலை, 7 மணிக்கு சொக்கநாதர், மீனாட்சியம்மனுக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து, கோவிலில் உள்ள அனைத்து திருமேனிகளுக்கும் திருமஞ்சனம் செய்து, புத்தாடை அணிவிக்கப்பட்டது. திருமறைகண்ட விநாயகர், அங்கயற்கண்ணி உடனமர், சொக்கநாதர், சேயிடைச் செல்வர், அறுபத்து மூன்று நாயன்மார்கள், தொகையடியார்கள், மாணிக்கவாசகர் மற்றும் சேக்கிழார் பெருமான் திருமேனிகளுக்கு, திருமஞ்சன வழிபாடு செய்யப்பட்டது.பகல், 12 மணிக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. மாலை, 4 மணிக்கு தெய்வங்கள் திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருளாசி வழங்கினர். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.