வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் சுமங்கலி பூஜை
ADDED :3656 days ago
ஓசூர் : கெலமங்கலம் வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோவிலில், சிறப்பு ஹோமம் மற்றும் சுமங்கலி பூஜை நடந்தது. ஆந்திர மாநிலம் பெனுகொண்டா பகுதியில், புகழ்பெற்ற வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிேஷகம் நேற்று நடந்தது. அங்கு செல்ல முடியாத பக்தர்களுக்காக, கெலமங்கலம் வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் சிறப்பு ஹோமம் மற்றும் அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து பெண்களுக்கு சுமங்கலி பூஜை நடத்தப்பட்டு, தம்பதிகளுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.