உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொட்டும் மழையில் கும்பாபிஷேகம்

கொட்டும் மழையில் கும்பாபிஷேகம்

வடமதுரை: வடமதுரை வெள்ளபொம்மன்பட்டியில் பழமை வாய்ந்த சக்திவிநாயகர், சுப்பிரமணியசுவாமி கோயில் இருந்தது. திண்டுக்கல் திருச்சி  தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்தப்பட்டபோது இக்கோயில் அகற்றப்பட்டது. இதனையடுத்து அதே பகுதியில் புதிதாக ÷ காயில்களை கட்டி நேற்று கும்பாபிஷேகம் நடத்தினர். நேற்று அதிகாலையில் இருந்து தொடர்ந்து மழை பெய்தபடி இருந்தது. பக்தஆஞ்சநேயர் ÷ காயில் அர்ச்சகர் நாராயணன் அய்யங்கார் கொட்டும் மழையுடன் கும்பங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினார்.  பழனிச்சாமி  எம்.எல்.ஏ., ஒன்றிய தலைவர் ராஜசேகர், பண்ணாரிஅம்மன் ஸ்பின்னிங் மில் பொதுமேலாளர் பிரபாகரன், மாவட்ட கவுன்சிலர் திரவியராஜ்,  கூட்டுறவு சங்க தலைவர் குப்பாச்சி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !