உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திண்டிவனம் கோவிலில் காரிய சித்தி மகா சங்கல்பம்!

திண்டிவனம் கோவிலில் காரிய சித்தி மகா சங்கல்பம்!

திண்டிவனம்: திண்டிவனம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், காரிய சித்தி மகா சங்கல்பம் நடந்தது. இக்கோவிலில், பெனுகொண்டா  வாசவி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக திருப்பணியின் காரிய சித்தி மகா சங்கல்பம் நடந்தது. கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு, குங்கும  அர்ச்சனை, 9 குழந்தைகளுக்கு கன்னி பூஜை, 17 தம்பதிகளுக்கு தம்பதி பூஜை மற்றும் மகா சங்கல்பம் நடந்தது. விழாவில், 100க்கும் மேற்பட்ட ஆர்ய  வைஸ்யர்கள் கலந்து கொண்டனர். கன்னிகா பரமேஸ்வரி தேவஸ்தான கமிட்டி செயலாளர் ரங்கமன்னார், இயக்குநர் வா”தேவன், வாசவி கிளப்  துணை ஆளுநர் சிவக்குமார், வட்டாரத்தலைவர் சங்கர், தலைவர் மனவளக்கலை பிரபாகர், வனிதா தலைவர் சந்திரகலா, செயலாளர்கள் நவநீதகி ருஷ்ணன், கோமதி பட்டாபிராமன், பொருளா ளர் ஜெயந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !