உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கரிவரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

கரிவரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள நாயக்கன்பாளையத்தில், ஸ்ரீதேவி, பூதேவி, சமேத கரிவரதராஜ பெருமாள் கோவில்  கும்பாபிஷேகம் நடந்தது. நாயக்கன்பாளையத்தில் உள்ள ஸ்ரீ கரிவரதராஜ பெருமாள் கோவில் வளாகத்தில் விநாயக பெருமாள், ஆண்டாள் நாச்சி யார், ஆஞ்சநேயர், சக்கரத்தாழ்வார், தன்வந்தரி, ராமானுஜருக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. ஸ்ரீதேவி, பூதேவி உடனமர்  கரிவரதராஜ பெரு மாளுக்கு புதுப்பொலிவுடன் கோபுரமும், பரம பத வாசலும் உள்ளன. விழாவையொட்டி, யாகசாலை பிரவேசம், பெருமாளுக்கு திருமஞ்சன  அலங்காரம், சிறப்பு யாகங்கள் நடந்தன.  கும்பாபிஷேக நிகழ்ச்சி, சிவானந்த தவக்குடில் ராஜூ அடிகளார், வாராஹி மணிகண்ட சுவாமிகள்,  காரமடை வேத வியாச சுதர்சன பட்டர் சுவாமி ஆகியோர் தலைமையில் நடந்தது. தொடர்ந்து அலங்காரம், தீர்த்த பிரசாத வினியோகம், உபந்யாசம்,  மதியம் அன்னதானம் ஆகியன நடந்தன. விழா ஏற்பாடுகளை நாயக்கன்பாளையம் கோவில் திருப்பணிக்குழு மற்றும் ஊர் பொதுமக்கள் செய்தி ருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !