ஏர்வாடி தர்காவில் ஐயப்ப பக்தர்கள் வழிபாடு!
ADDED :3655 days ago
ராமநாதபுரம்: சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள், ஏர்வாடி தர்காவில் வழிபாடு செய்தனர்.தமிழக, ஆந்திரா, கேரளா, கர்நாடகாவை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் ராமேஸ்வரம் ராமநாத சுவாமியை தரிசனம் செய்வர். இவ்வாறு வந்த விழுப்புரம் மாவட்டம் வடகுச்சிபாளையத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் நேற்று ஏர்வாடி வந்தனர். அங்குள்ள தர்காவில் வழிபாடு செய்தனர். பக்தர் கன்னியப்பன் கூறியதாவது, “கடந்த 16 ஆண்டுகளாக இங்கு வந்து மத நல்லிணக்க வழிபாடு செய்கிறோம்,” என்றார்.