4 ஆண்டுக்கு பின் நிரம்பிய கோயில் தெப்பம்
அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டையில் 94 மி.மீ., மழை பெய்த நிலையில் நான்கு ஆண்டுகளுக்கு பின் அருப்புக்கோட்டை ஆயிரங்கண் மாரியம்மன் கோயில் தெப்பம் நிரைந்தது. அருப்புக்கோட்டையில் நேற்று முன்தினம் காலையில் 48 மி.மீ., மாலையில் 94 மி.மீட்டர் மழை பெய்தது. இதனால் திருவள்ளுவர் நகர், நேரு நகர், புளியம்பட்டி பாம்பலம்மன் பகுதியில் முறையான வாறுகால், ரோடு இல்லை. பள்ளமான பகுதியாக இருப்பதால் சிறிய மழைக்கு கூட வீடுகளில் மழை நீர் புகுந்து விடுகிறது. அப்பகுதி ஆனந்தவள்ளி,"" பல ஆண்டுகளாக இதே போரட்டம் தான். மழை பெய்தால் எங்களுக்கு திண்டாட்டம் தான். வீடுகளில் புகுந்த மழை நீரை வெளியேற்ற முடியாமல் வாளியில் படித்து ஊற்ற வேண்டியுள்ளது. கழிவு நீரும் சேர்ந்து வருவதால் துர்நாற்றத்தில் வீடுகளில் இருக்க முடியவில்லை. நாங்களும் நகராட்சிக்கு வரி கட்டுகிறோம். எங்களுக்கு மட்டும் எந்தவித அடிப்படை வசதி செய்து தராமல் இருக்கின்றனர். என்றைக்கு தான் விடிவு காலம் வருமோ,என்றார். சொக்கலிங்கபுரம் காரியம் வெள்ளயைன் தெருவில் பழைய வீடு இடிந்து விழுந்ததில் அருகில் உள்ள சித்ரா என்பவரின் வீடும் சேதமடைந்தது. மழையால் 4 ஆண்டுகளுக்கு பின் அருப்புக்கோட்டை ஆயிரங்கண் மாரியம்மன் கோயில் தெப்பம் நிரைந்தது. இதுபோல் புளியம்பட்டி தெப்பமும் நிரைந்து மறுகால்பாய்கிறது.