சபரிமலை பக்தர்கள் அதிகரிப்பு: குமுளி ஒருவழிப்பாதையாகிறது
ADDED :3654 days ago
கம்பம்:மழை தொடரும் நிலையிலும் சபரிமலைக்கு செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் குமுளி ஒருவழிப்பாதையாக அறிவிக்கப்பட உள்ளது. கார்த்திகை முதல் தேதியில் இருந்து ஏராளமான பக்தர்கள், குமுளி வழியாக சபரிமலைக்கு வரத் துவங்குகின்றனர். கடந்த சில வாரங்களாக மழை பெய்து வரும் நிலையிலும், இரவிலும், பகலிலும் சபரிமலைக்கு செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், "இந்த ஆண்டு, கார்த்திகை முதல் தேதியில் இருந்தது சபரிமலைக்கு செல்லும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. குமுளி மலை ரோட்டில் வாகன நெரிசல் ஏற்படாமல் இருக்க, கடந்த சில ஆண்டுகளாக கம்பம் மெட்டு ரோட்டில் வாகனங்கள் திருப்பி விடப்படுகின்றன. விரைவில் குமுளி ரோட்டை ஒரு வழிப்பாதையாக அறிவிக்க உள்ளோம், என்றனர்.