உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 29ல் கைலாசநாதர் கோவில் கும்பாபிஷேகம்

29ல் கைலாசநாதர் கோவில் கும்பாபிஷேகம்

கடம்பத்துார்:கடம்பத்துார் அருகே உள்ள கைலாசநாதர் கோவிலில், வரும் 29ம் தேதி, மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.கடம்பத்துார் அடுத்த, ஸ்ரீதேவிக்குப்பத்தில் உள்ளது காமாட்சி அம்மன் சமேத கைலாசநாதர் கோவில். இந்த கோவிலில், புதிதாக காமாட்சி அம்பாள், விநாயகர், சுப்ரமணியர், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், நந்திதேவர், பலிபீடம் மறறும் சுவாமி விமானம் கோபுரம் ஆகிய மூர்த்திகள் அமைக்கப்பட்டுள்ளன. இவைகளுக்கான மகா கும்பாபிஷேகம், வரும் 29ம் தேதி, நடைபெற உள்ளது.வரும் 29ம் தேதி, காலை 8:50 மணிக்கு மகா பூர்ணாஹூதியும், காலை 9:00 கோபுர கும்பாபிஷேகமும், அதை தொடர்ந்து காலை 9:30 மணிக்கு அனைத்து மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகமும் நடைபெறும். பின், காலை 10:00 மணிக்கு மகா அபிஷேகமும், கைலாசநாதருக்கு வைதீக திருக்கல்யாணமும் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !