உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாதேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபம்

மாதேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபம்

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் – காரமடை ரோட்டின் அருகே குட்டையூரில் மாதேஸ்வரர் மலைக்கோவில் உள்ளது. இங்கு கடந்த ஐந்து  ஆண்டுகளாக, கார்த்திகை  தீபத்தன்று மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. நாளை (25ம் தேதி) கார்த்திகை தீப விழா நடக்கிறது.  மாலை, 5:30  மணிக்கு, 3 மீ., உயரம், 2.5 மீ., அகலம் கொண்ட கொப்பறையில், 100 லி., நெய்யை ஊற்றி, பெரிய காடா துணியை திரியாக அமைத்து தீபம் ஏற்ற ப்படுகிறது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கவும், பக்தர்கள் கிரிவலம் செல்வதற்கான ஏற்பாடுகளையும், ஓம் நமச்சிவாய அறக்கட்டளையை ÷ சர்ந்தவர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !