உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெருமுக்கல் மலை மீது கார்த்திகை தீப வழிபாடு!

பெருமுக்கல் மலை மீது கார்த்திகை தீப வழிபாடு!

முருக்கேரி: பெருமுக்கல் மலை மீது உள்ள முத்தியாஜல ஈஸ்வரர் கோவிலில் கார்த்திகை மகர தீபம், நாளை ஏற்றபடுகின்றது. முருக்கேரி அருகே  உள்ள பெருமுக்கல் மலை மீது நுõறு ஆண்டுகள் பழமை வாய்ந்த முத்தியாஜல ஈஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலை தமிழக அரசு, ஒரு கோடி  ரூபாய் செலவில் புதுப்பித்து வருகின்றது.  ஆயிரத்து 600 அடி உயரமுள்ள மலை மீது, கடந்த ஐந்து ஆண்டுகளாக 110 லிட்டர் கெள்ளவு கொண்ட  கொப்பரையில், பக்தர்கள் கார்த்திகை தீபம் ஏற்றி வழிபட்டு வருகின்றனர். இதன்படி, நாளை காலை 10.00 மணிக்கு மூலவர் முத்தியாஜல ஈஸ்வரரு க்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது. மாலை 5: 00 மணிக்கு சிறப்பு பூஜைகளும், 6:00 மணிக்கு கோவில் மலை உச்சியில் மகர தீபமும் ஏற்ற ப்படுகின்றது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !