உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

ராசிபுரம்: ராசிபுரம் அடுத்துள்ள, ஆர்.புளியம்பட்டியில் மகா சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில், ஏராளமான பக்தர்கள் ஸ்வாமி தரிசனம் செய்தனர். புதுச்சத்திரம் அருகே உள்ள ஆர்.புளியம்பட்டியில் மகா சக்தி மாரியம்மன், செல்வ விநாயகர், பெருமாள் ஸ்வாமி கோவில் மிகுந்த பொருட்செலவில் கோவில் கோபுரம், கருவறை, அர்த்தமண்டபம், மஹா மண்டபம் உள்ளிட்ட திருப்பணிகள் முடிவடைந்தது. முன்னதாக 20ம் தேதி காவிரி தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. தீர்த்தக்குடம் அழைத்தல், முளைப்பாரி ஊர்வலம், கணபதி ஹோமம், முதல்காலயாக பூஜை நடந்தது. கோவில் கோபுரத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. மகா சக்தி மாரியம்மன், செல்வ விநாயகர், பெருமாள் உள்ளிட்ட ஸ்வாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில், அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !