காரைக்கால் நாகநாதன்சுவாமி கோவிலில் மஹா தீபம்!
ADDED :3646 days ago
காரைக்கால்: காரைக்கால் மேலகாசாகுடி நாகநாதன்சுவாமி கோவில் நேற்று முன்தினம் கார்த்திகை முன்னிட்டு மஹா தீபம் ஏற்றப்பட்டது. காரைக்கால் மாவட்டத்தில் திருக்கார்த்திகை திருநாளை முன்னிட்டு நேற்று முன்தினம் திருநள்ளார் தர்ப்பாரண்யேஸ்வர தேவஸ்தானம் சனிஸ்வர பகவான் கோவில், மேலகாசாகுடி நாகநாதன் சுவாமி கோவில், பார்வதிஸ்வர் கோவில்,கையிலாசநாதர் கோவில்,நித்ய கல்யாண பெருமாள் கோவில், பத்திரகாளிம்மன் கோவில்,உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் திருக்கார்த்திகை முன்னிட்டு ஆபிஷேகம் மற்றும் அராதனைகள் நடைபெற்று.பின் கோவிலுக்கு எதிரே வைக்கப்பட்ட பனைமட்டையால் தயாரிக்கப்பட்ட சொக்கப்பனைக்கு மஹா தீபம் ஏற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.