சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் கார்த்திகை தீப விழா!
ADDED :3646 days ago
வடமதுரை: வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் கார்த்திகை தீப விழா நடந்தது. திருமஞ்சனம், மகாதீபம் ஏற்றப்பட்டதை தொடர்ந்து சுவாமி புறப்பாடாகி தேரடியில் சொக்கப்பானை கொளுத்தப்பட்டது. இதே போல வடமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலிலும் கார்த்திகை தீப விழா நடந்தது.வள்ளிதேவயானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு திருமஞ்சனம் வழிபாடும், மகாதீபத்தை தொடர்ந்து சொக்கப்பானை கொளுத்தப்பட்டது. ஏற்பாட்டினை செயல் அலுவலர் வேல்முருகன் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.
* தென்னம்பட்டி சவுடம்மன் மலைக்கோயிலில் கார்த்திகை தீப விழாவையொட்டி தெப்பம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் அகல் விளக்கொளியில் ஜொலித்தன. பக்தர்களது சிறப்பு வழிபாடும்,சொக்கப்பானை கொளுத்தும் நிகழ்ச்சியும் நடந்தது.