உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொள்ளாச்சி விநாயகர் கோவிலில் கும்பாபிேஷக விழா

பொள்ளாச்சி விநாயகர் கோவிலில் கும்பாபிேஷக விழா

பொள்ளாச்சி: பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளி தப்பட்டை கிழவன் புதுார் சாலையில், கற்பக விநாயகர், பாலமுருகன் கோவிலில், அஷ்டபந்தன மகா கும்பாபிேஷக விழா, இன்று நடக்கிறது. கடந்த, 24ம் தேதி, காலை, 7:00 மணி முதல், 8:45 மணி வரை கணபதி பூஜையுடன் கும்பாபிேஷக விழா துவங்கியது. இரு நாட்களாக, விநாயகர் கோவிலில் இருந்து தீர்த்தம் மற்றும் முளைப்பாரி எடுத்து வருதல், யாக பூஜைகள், கலச ஸ்தாபனம் உட்பட நிகழ்ச்சிகள் நடந்தன. இன்று காலை, 5:30க்கு, கணபதி பூஜை, கலச பூஜை, கணபதி ேஹாமம், சுப்ரமணியர் ேஹாமம், பிம்ப சுத்தி, நாடிசந்தானம், 7:15க்கு, கலச யாத்திரை, 7:30க்கு, கற்பக விநாயகர், பாலமுருகனுக்கு, மகா கும்பாபிேஷகம் நடக்கின்றன. காலை, 7:45க்கு, மகா தீபாராதனை, 10:00 மணிக்கு, சங்காபிேஷகம் நடக்கின்றன. 11:00 மணி முதல், அன்னதானம் வழங்கப்படுகிறது. பக்தர்கள் திரளாக பங்கேற்க அழைப்பு விடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !