உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கீழ கொடுங்காலூர் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்

கீழ கொடுங்காலூர் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்

திருவண்ணாமலை: வந்தவாசி அருகிலுள்ள கீழ கொடுங்காலூர் அருள்மிகு முத்துமாரியம்மன் கோயிலில் இன்று காலை கும்பாபிஷேகம் சிறப்பான முறையில் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் சிறப்பாக செய்திருந்தனர். கும்பாபிஷேகத்தை தொடர்ந்து 48 நாள் நடைபெறும் மண்டலாபிஷேகத்திற்கு பக்தர்கள் பூஜைபொருள்கள் கொடுக்கலாம் எனவும் விழா கமிட்டியினர் தெரிவித்தனர். மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒன்றான பரசுராமரின் அன்னை ரேணுகா தேவியின் கோயில்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !