தம்புராயன் கோவிலில் சங்கு பூஜை வழிபாடு
ADDED :3644 days ago
கோவை : கோல்டுவின்ஸ், துரைசாமி நகர் தம்புராயன் கோவிலில், கார்த்திகை மாத தீப வழிபாடு நடந்தது. கார்த்திகை மாதத்தில், சிவபெருமானுக்கு சங்கு பூஜை செய்வதால், சகல நன்மைகளும் கிடைக்கும். இதையடுத்து, சோமவாரத்தில், சிவனுக்கு, ௧௦௮ சிறப்பு சங்கு பூஜை வழிபாடு நடந்தது. ஒரு பெரிய வலம்புரி சங்கும், ௧௦௮ சங்குகளுடன் சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டன. தொடர்ந்து, சிவனுக்கு பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டு, பூஜைகள் நடந்தன. பக்தர்கள் பலரும் பங்கேற்று, வழிபாடு நடத்தினர்.