உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவகங்கை செல்வகணபதி ஆலய கும்பாபிஷேகம்

சிவகங்கை செல்வகணபதி ஆலய கும்பாபிஷேகம்

சிவகங்கை:சிவகங்கை நேருபஜார் செல்வகணபதி ஆலய கும்பாபிஷேகம் நடந்தது. நவ.,27ல் அனுக்கை, விக்னேஸ்வர பூஜை, கும்பாபிஷேக பூஜை துவங்கியது. நவ.,28ல் வாஸ்து சாந்தி, மருந்து சாத்துதல், முதல் கால யாகசாலை பூஜை நடந்தது. நேற்று காலை 6 மணிக்கு, 2ம் கால யாகசாலை, அதை தொடர்ந்து லட்சுமி, கோ பூஜை, கடம் புறப்பாடு நடந்தது. காலை 8:30 மணிக்கு விமானத்தில் உள்ள கலசத்திற்கும், அதை தொடர்ந்து மூலஸ்தானத்தில் மகா அபிஷேகம் நடந்தது.அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !