உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எதையும் வீணாக்காதீர்!

எதையும் வீணாக்காதீர்!

ஒருமுறை, ரமணர் தன்னுடன் இருந்த விஸ்வநாத சுவாமியிடம், நீ கரி அடுப்பை எப்படிபற்றவைப்பாய்? என்று கேட்டார். அதற்கு அவர், ஒரு வேண்டாத துணியை எடுத்து, அதை மண்ணெண்ணெயில் முக்கி அதைக்கொண்டு பற்றவைப்பேன் என்றார் பவ்யமாக நீ எதற்காக மண்ணெண்ணெயை வீணடிக்கிறாய். காய்ந்த புல் அல்லது உன்னைச்சுற்றி கீழேவிழுந்துகிடக்கும் காய்ந்த இலைகள் அல்லது வேண்டாத பேப்பரை போட்டு அடுப்பை பற்ற வைக்கலாமே! மண்ணெண்ணெய் என்று அல்ல... இனி எதையும் கொஞ்ச அளவே என்றாலும் கூட, அதை வீண்செய்யக்கூடாது, என்றார் ரமணர். அன்றிலிருந்து, இனி எதையும் வீணடிக்கக்கூடாது என்று முடிவுசெய்தார் விஸ்வநாத சுவாமி. இவரது தந்தைக்கு, ரமணர் கணபதி முனியின் ரமண கீதா என்ற புத்தகத்தை பரிசாக கொடுத்திருந்தார், அதை இளம் வயதில் படித்த விஸ்வநாத சுவாமிக்கு ரமணர் மீது அதிக ஈடுபாடு ஏற்பட்டு, ரமணருடன் ஆஸ்ரமத்தில் தங்கிவிட்டார் ரமண மகரிஷி சொன்னது அவருக்கு மட்டுமல்ல.. நம் எல்லோருக்கும் அல்லவா நெற்றியில் பட்டென அடித்தாற் போல் இருக்கிறது! நாமும் இனி எதையும் வீண் செய்வதை தவிர்த்து வாழலாமே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !