உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பக்கத்து வீட்டாருடன் அன்பு கொள்ளுங்கள்!

பக்கத்து வீட்டாருடன் அன்பு கொள்ளுங்கள்!

*தொழுதாலும், நோன்பு நோற்றாலும், தர்மம்செய்தாலும், அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்களை திட்டி வேதனைப்படுத்தும் பெண் நரகத்திற்கேசெல்வாள். அதே நேரம் தொழாத, தர்மம் செய்யாத, நோன்பு நோற்காதவளாக இருந்தாலும், ஒரு பெண்பக்கத்து வீட்டாருடன் அன்பு கொண்டிருந்தால் அவள் சொர்க்கம்
நுழைவாள்.
*தலையில் முக்காடுஇல்லாமல், உடலைமறைத்துக்கொள்ளாமல், வீட்டை விட்டு வெளியே செல்லும் பெண் ஷைத்தானின் முகத்தைக் கொண்டு செல்கிறாள். அவள்வீட்டுக்குத் திரும்பி வரும்போது ஷைத்தானின்முகத்தைக் கொண்டு வருகிறாள்.
*மெல்லிய ஆடை அணிந்த பெண்ணே! உன்னை முழுமையாக்கிக் கொள்! நிர்வாணமாக நடக்காதே.
*ஒரு மனைவிக்குரிய செல்வத்தை எல்லாம் அவள் கணவன் செலவு செய்து அழித்துவிடுவானாயின் அதற்காக அவள் தன்கணவனைப் பார்த்து,  என் செல்வத்தைஎல்லாம் அழித்துவிட்டாயே, என்று கடிந்து கொள்வாளேயானால், அவள் நாற்பது ஆண்டு காலம் செய்த நன்மைகள் அழிக்கப்பட்டு விடும்.
*ஐங்காலமும் தொழுது, ரமலான் மாதம் நோன்பும் நோற்று, தன்னை எந்த கெட்டசெயலிலும் ஈடுபடுத்தாமல், கணவனின்கட்டளைக்கு கட்டுப்பட்டு நடக்கும் பெண், அவள் விரும்புகிற சொர்க்கத்தில் நுழைவாள்.
*உங்களில் ஒருவருக்கொருவர் காலில் விழுந்து தலைவணங்க (ஸஜதா) செய்ய ஏவி இருந்தால், மனைவி கணவனுக்கு தலைவணங்க ஏவி இருப்பேன். அதற்கு இடமில்லை. இறைவனுக்கு மட்டுமே தலை வணங்கவேண்டும்.
*வேடிக்கை பார்ப்பதற்காக ஒருபெண் வீட்டை விட்டு வெளியேறுவாளேயானால், அவளுடைய பெண்மை பெரிதும் பாதிக்கப்படுகிறது. சில சந்தர்ப்பங்களில்விபரீதமும் ஏற்பட்டு விடுகிறது.
*சில பெண்களின் நடுவே ஒரு நோயாளி நடந்து சென்றார். அது சமயம் அப்பெண்கள் அவரை பரிகாசம் செய்தார்கள். அந்த செயலால் அந்த பெண்களில் ஒருவர் அதே நோயால்மிகவும் பாதிக்கப்பட்டார்.
*பெரியோர்களுக்கு கண்ணியம்கொடுக்காதவரும், சிறியோர் மீது இரக்கம் கொள்ளாதவரும் எம்மைச் சேர்ந்தவரல்ல.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !