உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தாய், தந்தையை இழந்த குழந்தைகளே!

தாய், தந்தையை இழந்த குழந்தைகளே!

இளவயதிலேயே, குழந்தைகள் தாய், தந்தையை இழந்து விடுவது என்பது கொடிய தண்டனை. அவர்கள் வளர்ந்து ஆளாவதற்குள் படும் பாடு கொஞ்ச நஞ்சமல்ல! அப்படிப்பட்ட குழந்தைகளுக்கு மனோபலம் கிடைக்கவும், தந்தை நோய்வாய்ப்பட்டு இருந்தால், அவர் குணம் பெற்று தீர்க்காயுளுடன் வாழவும், வேலை வாய்ப்பு, திருமணம் உள்ளிட்டவற்றிற்கு பல வாய்ப்புகள் வந்தும் கடைசி நேரத்தில் கை நழுவிப் போவதைத் தடுக்கவும், சீர்காழி தோணியப்பரையும்,பெரிய நாயகியையும் நினைத்து பாட வேண்டிய பதிகம் இது. ஞானசம்பந்தர் இதை நமக்கு அருளியுள்ளார்.

உங்களுக்கு நம்பிக்கையூட்ட ஒரு பாட்டு!

ஓர்உரு ஆயினை;மான்ஆங் காரத்து
ஈர்இயல்பாய் ஒரு விண்முதல் பூதலம்
ஒன்றிய இருசுடர் உம்பர்கள் பிறவும்
படைத்து அளித்து அழிப்ப, மும்மூர்த்திகள் ஆயினை;
இருவரோடு ஒருவன் ஆகி நின்றனை.
ஓர் ஆல் நீழல், ஒண்கழல் இரண்டும்
முப்பொழுது ஏத்திய நால்வர்க்கு ஒளிநெறி
காட்டினை; நாட்டம் மூன்றாகக் கோட்டினை
இருநதி அவரமோடு ஒருமதி சூடினை;
ஒருதாள் ஈர்அயில் மூவிலைச் சூலம்
நாற்கால் மான் மறி,ஐந்தலை அரவம்
ஏந்தினை; காய்ந்த நால்வாய் மும்மதத்து
இருகோட்டு ஒருகரி ஈடு அழித்து உரித்தனை
ஒருதனு இருகால் வளைய வாங்கி,
முப்புரத்தோடு நானிலம் அஞ்ச,
கொன்று தலத்து உற அவுணரை அறுத்தனை
ஐம்புலன் நாலாம் அந்தக்கரணம்,
முக்குணம், இருவளி, ஒருங்கிய வானோர்
ஏத்த நின்றனை; ஒருங்கிய மனத்தோடு
இருபிறப்பு ஓர்ந்து, முப்பொழுது குறை முடித்து
நான்மறை ஓதி, ஐவகை வேள்வி
அமைத்து, ஆறங்கம் முதல் எழுத்து ஓதி,
வரன்முறை பயின்ற, எழுவான்தனை வளர்க்கும்
பிரமபுரம் பேணினை;
அறுபதம் முரலும் வேணுபுரம் விரும்பினை;
இகலி அமைந்து உணர்புகலி அமர்ந்தனை;
பொங்கு நாற்கடல் சூழ்வெங்குரு விளங்கினை;
பாணி மூஉலகும் புதைய, மேல் மிதந்த
தோணிபுரத்து உறைந்தனை; தொலையா இருநிதி
வாய்ந்த பூந்தராய் ஏய்ந்தனை;
வரபுரம் ஒன்று உணர்சிரபுரத்து உறைந்தனை;
ஒருமலை எடுத்த இருதிறல் அரக்கன்
விறல்கெடுத்து அருளினை; புறவம் புரிந்தனை;
முந்நீர்த் துயின்றோன், நான்முகன் அறியாப்
பண்பொடு நின்றனை சண்பை அமர்ந்தனை;
ஐயுறும் அமணரும் அறுவகைத் தேரரும்
ஊழியும் உணராக் காழி அமர்ந்தனை;
எச்சன் ஏழ்இசையோன் கொச்சையை மெச்சினை;
ஆறுபதமும், ஐந்து அமர் கல்வியும்,
மறைமுதல் நான்கும்
மூன்று காலமும், தோன்ற நின்றனை;
இருமையின் ஒருமையும், ஒருமையின் பெருமையும்
மறுஇலா மறையோர்
கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை,
கழுமல முதுபதிக் கவுணியன் அறியும்;
அனைய தன்மையை ஆதலின், நின்னை
நினைய வல்லவர் இல்லை, நீள் நிலத்தே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !