சபரிமலை ரயில் பாதை: பாதி செலவை ஏற்க கேரளா சம்மதம்
ADDED :3614 days ago
சபரிமலை : அங்கமாலி-, எருமேலி, சபரி ரயில் பாதைக்கான செலவில் பாதி தொகையான, 840 கோடி ரூபாயை வழங்க, கேரள அரசு சம்மதம் தெரிவித்துள்ளது. இதை தொடர்ந்து, இந்த திட்டம் விரைவாக செயல்படுத்தப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்காலத்தில் இந்த பாதையை புனலுார் வரை நீட்டிக்கும் போது, திருவனந்தபுரம் மற்றும் தமிழக பகுதிக்கு, மூன்றாவது ஒரு ரயில் பாதை அமையும் வாய்ப்பு உள்ளது.