உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோட்டார் சவேரியார் ஆலய திருவிழா

கோட்டார் சவேரியார் ஆலய திருவிழா

நாகர்கோவில்: கோட்டார் புனித சவேரியார் ஆலய திருவிழா கடந்த 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. எட்டாம் நாள் விழாவான டிச., ஒன்றாம் தேதி மாலையில் குழித்துறை மறை மாவட்ட ஆயுர் ஜெரோம்தாஸ் வறுவேல் மறையுரை நிகழ்த்தினார். தொடர்ந்து திருப்பலி நடைபெற்றது. இரவு பத்து மணிக்கு தேர்பவனி நடைபெற்றது. இரண்டாம் தேதி ஒன்பதாம் நாள் விழாவில் மாலை 6.30 மணிக்கு கோட்டார் ஆயர் பீட்டர் ரெம்ஜியூஸ் தலைமையில் சிறப்பு மாலை ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து இரவு 10.30 மணிக்கு தேர்பவனி நடைபெற்றது. மூன்றாம் தேதி பத்தாம் நாள் விழாவில் காலை எட்டு மணிக்கு ஆயர் பீட்டர் ரெம்ஜியூஸ் தலைமையில் திருவிழா ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடக்கிறது. தொடர்ந்து மலையாளத்தில் திருப்பலி நடைபெறுகிறது. விழாவையொட்டி குமரி மாவட்டத்துக்கு மூன்றாம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !