மழை வெள்ள பாதிப்புகள் நீங்க வேண்டி.. கோயிலில் சிறப்பு கூட்டு பிரார்த்தனை!
மயிலாடுதுறை: நாகை மாவட்டம் சீர்காழி தாலுக்கா வைத்தீஸ்வரன் கோயிலை அடுத்த திருப்புன்கூரில் பழமை வாய் ந்ததும், திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் பாடல் பெற்றதுமான ஸ்ரீ சிவலோக நாத சுவாமி கோயில் உள்ளது. இந்த தலத்தில் நந்தனார் இறைவனை தரிசிப்பதற்காக நந்தி விலகியதா க ஐதீகம்.இங்கு உள்ள மிகப்பெரிய நந்திக்கு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. முன்னோரு காலத்தில் பெருமழை பெய்த போது அதனை நிறுத்த சுவாமி, அம்பாள் மற்றும் நந்திக்கு அபிஷேகம் செய்ததா ல் மழைநின்றதாக கூறப்படுகிறது. இதனை சுந்தரர் தனது தேவாரத்தில் பாடியுள்ளார்.
வையகமுற்றும் மாமழைமறந்து, வயலில், நீர்நிலை மாலூந்தருகோம்
உய்யக்கொள்க மாற்று எங்களை என்ன ஒளிக்கொள் வெண்முகிலாய்
பரந்து எங்கும் பெய்யும் மாமழை பெருவள்ளந்தவிர்த்தும், பன்னிருவேலி
கொண்டருளும், செய்கைக்கண்டு நின் திருவடியடைந்தேன் செழும்பொழில்
திருப்புன்கூருளானே
என்று ஏழாம் திருமுறையாக தேவாரத்தில் பாடியுள்ளார். இத்தகைய சிறப்புவாய்ந்த திருப்புன்கூர் கோயிலில் மழை வெள்ள பாதிப்புகள் நீங்கவேண்டி சுவாமி, அம்பாள், நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் மற்றும் மஹாதீபாராதனை நடைபெ ற்றது. தொடர்ந்து மயிலாடுதுறை சுவாமிநாத சிவாச்சாரியார் தலைமையிலானோர் தேவாரப்பாடல் பா டி கூட்டு பிரார்த்தனை செய்தனர். இதில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கஜேந்திர ன், செயல் அலுவலல் முருகையன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்று தரிசனம் செய்தனர்.மானுக்கு சிறப்பு அபிஷேகம், மஹா தீபாராதனை நடைபெற்றது.