உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மழை நிற்க வேண்டி தஞ்சை பெரியகோயிலில் வருண பகாவனுக்கு சிறப்பு பூஜை!

மழை நிற்க வேண்டி தஞ்சை பெரியகோயிலில் வருண பகாவனுக்கு சிறப்பு பூஜை!

தஞ்சாவூர்: தமிழகத்தில் தொடர்ந்து பெய்ந்து வரும் மழையால் சென்னை முழுவதும் நீரில் தத்தளிக்கும் நிலையில், அங்குள்ள மக்களின் நன்மைக்காவும்,தொடரும் நிற்க வேண்டும் எனவும் தஞ்சை பெரியகோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.

தஞ்சாவூர் பெரியகோயிலில் சன்னதிக்கொண்டு இருக்கும் வருண பகாவனை வழிபட்டால் மழைவரும் என்பது ஐதீகம். தமிழகத்தில் தொடர்ந்து ஒரு மதங்களாக பெய்ந்து வரும் வடக்கிழக்கு பருவமழையால், சென்னை,கடலுார், திருவள்ளூர் மாவட்டங்களில் வெள்ளம் சூழந்தநிலையில், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரும் அளவில் பாதிக்கப்பட்டன. இதற்காக தஞ்சை பெரியகோயில், தமிழகத்தில் தொடரும் மழை நிற்க வேண்டியும், சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களின் நன்மைக்காவும் குருக்கள் குருமூர்த்தி சுவாமிகள் தலைமையில், தயிர்,காவி பொடி, மஞ்சள் போன்ற பொருள்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டன. பின்பு மழை நிற்க வேண்டு வேந்தமந்திரங்கள் பாடப்பட்டன. பின்னர் வருண பகாவனின் உருவசிலைக்கு சந்தனம் முழுவதுமாக அலங்கரிப்பட்டு,ரோஜா மாலை போடப்பட்டு இருந்தன. இது குறித்து குருக்கள் குருமூர்த்தி கூறுகையில்; தனி சன்னதிக்கொண்டு இருக்கும் வருண பகாவனிடம்,தமிழகத்தில் தொடரும் மழையை நிறுத்த வேண்டி சிறப்பு அபிஷேகம் நடந்தப்பட்டன. சுமார் 1500 ஆண்டுளுக்கு முன்பு சுந்தரரால் மழையை வர வேண்டியும், பின்பு மழை நிற்க வேண்டியும் தனி தனி பாடல் பாடல் பாடல்பாடப்பட்டதாக சொல்லப்படுகிறது. அந்தவகையில் மழை நிற்க வேண்டிய திருமுறை பாடல்கள் இன்று பாடப்பட்டுள்ளன இவ்வாறு தெரிவித்தார்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !