உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூப்பல்லக்கில் ஓசூர் அம்மன் வீதி உலா

பூப்பல்லக்கில் ஓசூர் அம்மன் வீதி உலா

பள்ளிப்பட்டு : பெருமாநல்லூரில் நடைபெற்ற ஜாத்திரை திருவிழாவில், ஓசூர் அம்மன் மலர் அலங்காரத்தில், பூப்பல்லக்கில் திருவீதி உலா நடைபெற்றது.பள்ளிப்பட்டை அடுத்த, பெருமாநல்லூரில் ஓசூர் அம்மன் கோவில் உள்ளது. திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலின், இணைக்கோவிலான இக்கோவிலில் ஜாத்திரை திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமும், வெள்ளிக்கவசம் சார்த்தப்பட்டு, காலை 11 மணிக்கு, கூழ் வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 4 மணியளவில், கிராமப்புற பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கலிட்டு மாவிளக்கேற்றி வழிபட்டனர்.மாலை 6 மணியளவில், பெருமாநல்லூர் ஏரிக்கரையில் அமைந்துள்ள, பெரிய ஓசூர் அம்மனுக்கு கரகம் எடுத்து, பம்பை உடுக்கை அடித்து, பூஜை நடத்தப்பட்டது. பின் கரகம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, ஓசூர் அம்மன் கோவிலை அடைந்தது. நள்ளிரவு 2 மணிக்கு பிறகு, உற்சவர் ஓசூர் அம்மன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, பூப்பல்லக்கில் திருவீதிஉலா நடந்தது. வழிநெடுகிலும் பக்தர்கள் கூடி, அம்மனை வழிபட்டனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை, ஊராட்சி மன்றத் தலைவர் பிரபாவதி பழனி மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !