உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூலோகநாதர் கோவிலில் உழவாரப்பணி

பூலோகநாதர் கோவிலில் உழவாரப்பணி

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் பூலோகநாதர் கோவிலில் உழவாரப்பணி நடந்தது. நெல்லிக்குப்பத்தில் மன்னர்களால் கட்டப்பட்ட பழமையான புவனாம்பிகை உடனுறை பூலோகநாதர் மற்றும் அலமேலு மங்கை தாயார் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில் உள்ளது. இக்கோவிலில் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த அகத்தியர் சன்மார்க்க சங்கத்தினர் உழவாரப்பணி மேற்கொண்டனர்.தலைவர் ஜோதிலிங்கம், செயலர் கணேஷ், குமார் குருக்கள், சந்திரசேகர், சித்தானந்தம் உட்பட பலர் கோவில் வளாகத்தை தூய்மை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !