உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்துமாரியம்மன் கோவில் தீ மிதி திருவிழா கோலாகலம்

முத்துமாரியம்மன் கோவில் தீ மிதி திருவிழா கோலாகலம்

திருவள்ளூர் : திருவள்ளூர் அடுத்த, புங்கத்தூர் முத்துமாரியம்மன் கோவில் 23ம் ஆண்டு தீ மிதி திருவிழா நேற்று முன்தினம் நடந்தது.விழாவையொட்டி, தாய் வீட்டு வரிசை கொண்டு வருதல், கிராம தேவியை அழைத்து வருதல், காப்பு கட்டுதல், அம்மனுக்கு குங்கும பூஜை, அம்மன் கரகம் வீதியுலா, பால் அபிஷேகம், கூழ் வார்த்தல், கிராம பெண்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்து படையலிடுதல், பக்தர்கள் தங்களது உடலில் அலகு குத்தி தங்களது நேரத்திக் கடனை செலுத்துதல் ஆகியவை நடந்தன.நேற்று முன்தினம் நடந்த தீ மிதி திருவிழாவில், ஏராளமானோர் கலந்து கொண்டு தீ மிதித்தனர். இரவு 7 மணிக்கு உற்சவர் அம்மன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, திருவீதியுலா நடந்தது. நேற்று காலை 6 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !